Latest News :

ருக்மணி வசந்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு
Tuesday January-06 2026

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது. அந்தப் பயணத்தில், முக்கியமான திருப்பமாக, மெலிசா என்ற கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். கம்பீரமும் அதிகாரமும் கொண்ட, அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கும் மெலிசாவாக  திரையில் தோன்றுகிறார்.

 

இந்த படம், இயக்குநர் கீது மோகன்தாஸின் தனித்துவமான கற்பனை உலகில், நடிகர் யாஷுடன் ருக்மிணி வசந்த் இணைவது,  முக்கியமான கூட்டணியாக அமைந்துள்ளது. தனித்துவமான நடிப்பு திறமைக்கு பெயர்பெற்ற  ருக்மிணியின் அறிமுகம், கீதுவின் உணர்வுப்பூர்வமான, கதைசொல்லலுக்கும், உலகத் தரத்திலான இந்திய திரைப்படம் உருவாக்க வேண்டும் என்ற யாஷின் கனவுக்கும் வலுவான அடையாளமாக இருக்கிறது.

 

முன்னதாக கியாரா அத்வானி (நாதியா), ஹூமா குரேஷி (எலிசபெத்), நயன்தாரா (கங்கா), தாரா சுதாரியா (ரெபேக்கா) ( Rebecca) ,ஆகியோரின் கண்கவர் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இப்போது மெலிசாவாக ருக்மிணி வசந்தின் அறிமுகம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தின் உலகத்தை மேலும் அழகுபடுத்துகிறது.

 

1960-களின் இறுதிக் காலத்தை பின்னணியாகக் கொண்ட பார்ட்டி சூழலில், மெலிசா தன்னம்பிக்கையின் உருவமாக  இயல்பாக நடிக்கிறார். அவளைச் சுற்றியுள்ள சத்தம், கலகலப்பும், கூட்டம், கொண்டாட்டம் என அனைத்தையும் மீறி, அவளின் கண்களில் தெரியும் கூர்மையான உறுதி நம் கவனத்தை ஈர்க்கிறது. அந்த கூட்டத்தில் கூட,  அவள் முழுமையாக தன் கட்டுப்பாட்டில்,  சூழலை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் ஒரு ஆளுமை அவளின் நடையில், பார்வையில் வெளிப்படுகிறது.

 

இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறுகையில், “ருக்மிணியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவளின் அறிவாற்றல். அவள் வெறும் நடிப்ப்பை மட்டும் வெளிப்படுத்துவதில்லை,  அவள் ஆழமாக சிந்திக்கிறாள். சந்தேகத்தால் அல்ல, ஆர்வத்தால் கேள்விகள் கேட்கிறாள். அது என்னையும் இயக்குநராக மேலும் ஆழமாக யோசிக்க வைக்கிறது.  சில நேரங்களில் நான் சிந்தித்த விசயங்களையும்  மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. திரையில் உள்ள அறிவாற்றல் பெரும்பாலும் சொல்லப்படாத இடங்களில்தான் இருக்கும் என்பதை அவள் நினைவூட்டுகிறாள். காட்சிகளுக்கு இடையில், அவள் அமைதியாக தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்க்கிறேன்—செட்டிலிருந்து கிடைக்கும் சிறு அனுபவங்கள், எண்ணங்களை பதிவு செய்கிறாள். அந்தக் கணங்களே அவளின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அவள் எப்போதும் தனக்கான தனி உலகத்தை கட்டியெழுப்பிக்கொண்டே இருக்கிறாள். அவளின் அணுகுமுறை மிகுந்தசிந்தனையுடையது  சில நேரங்களில், அந்த அடுக்குகளான நடிப்பிற்குப் பின்னால் இருக்கும் மனதைப் புரிந்துகொள்ள, அவள் குறிப்பேட்டின் பக்கங்களைப் படிக்க முடியுமா என  எனக்கு ஆசை கூட வருகிறது.” என்றார்.

 

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

 

தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி  (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.

 

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும்  மார்ச் 19-ம் தேதி, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

Related News

10867

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

’மெல்லிசை’ படம் பற்றி மனம் திறந்த நடிகர் கிஷோர்!
Tuesday January-06 2026

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...

’பராசக்தி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday January-06 2026

டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில்,  சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery