Latest News :

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. அதே சமயம், மறு வெளியீட்டு தேதியை அறிவிக்காததால், படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 

இந்த நிலையில், ’ஜன நாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நீதிபதி பி.டி.ஆஷா, நாளை (ஜனவரி 9) 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், படம் நாளை மறுநாள் வெளியாகுமா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீர்ந்தாலும், படத்தை  உடனடியாக வெளியிடாமல், பொங்கல் பண்டிகையின் தொடக்க நாளான ஜனவரி 14 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாகவும், அது குறித்து வியாபார ரீதியிலான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

எது எப்படியோ, நாளை காலை வழங்க இருக்கும் தீர்ப்பை வைத்தே விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு நிலை தெரிய வரும்.

Related News

10871

‘பெத்தி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday February-06 2026

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட  பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது...

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான மகேந்திரனின் ’நீலகண்டா’!
Friday February-06 2026

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன்...

கணவனின் கனவை நிறைவேற்ற தயாரிப்பாளரான மனைவி!
Friday February-06 2026

வீர அன்பரசு எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’...

Recent Gallery