Latest News :

நடிகை கெளதமிக்கு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது!
Tuesday January-13 2026

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி விருது வழங்கும் விழா கடந்த ஜனவரி 11 ஆம் தேதி சென்னை, வள்ளூவர் கோட்டத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.

 

இந்த வருடத்திற்கான விருது பெற்றவர்களின் பட்டியல்:

 

1.திரையுலகில் தொடர்ந்து  50 ஆண்டுகள் சாதனை புரிந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.

 

2. தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக திரைக்கதை அமைப்பதில் தனி முத்திரை பதித்து வரும் முடிசூடா மன்னன் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் அவர்களுக்கு சிறந்த   திரைக்கதை மன்னன் விருது.  

 

3.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விருது -  இயக்குநர் ஆர். பார்த்திபன் .

 

4. "லயன் லேடி" புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது -  நடிகை கௌதமி

 

5. புரட்சி தலைவர் எம்ஜி.ஆர் விருது-  இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் 

 

6. நடிகர் திலகம் சிவாஜி விருது -  இயக்குநர் பி. வாசு 

 

7.  ஏவி.எம் சரவணன் சாதனையாளர் விருது - இயக்குநர் எஸ்பி. முத்துராமன் 

 

8. புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது -  நடிகை நளினி 

 

9.பிரான்ஸ் நாட்டின்  சசெவாலியர் விருதினை பெற்ற பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி அவர்களை பாராட்டி விருது

 

10. தியாகச்செம்மல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படமான "தேசிய தலைவர்" படத்தை திறம்பட இயக்கிய  இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் அவர்களுக்கு விருது.

 

11.பிறந்தநாள் வாழ்த்து படத்தில் நடித்த அப்பு குட்டி- க்கு சிறப்பு விருது.

 

12. ஆணிரை  படத்திற்காக ஈவி.கணேஷ் பாபு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, ஒளிப்பதிவாளர் செல்லயா - அவர்களுக்கு சிறப்பு விருது 

 

13. டெக்கன் கிரானிக்கல் என்டர்டைன்மென்ட் ஆசிரியர் அனுபமா வின் 25 ஆண்டு கால சேவையை பராட்டி சிறப்பு விருது.

 

1.சிறந்த நடிகர் - விக்ரம் பிரபு - சிறை

 

சிறந்த நடிகர் சிறப்பு விருது சண்முக பாண்டியன் - கொம்பு சீவி

 

2.சிறந்த நடிகை - பிரிகிடா சகா- மார்கன் 

 

சிறந்த நடிகை சிறப்பு பரிசு - சேஷவிதா

 

3.சிறந்த படம் - சத்யஜோதி பிலிம்ஸ் தலைவன் தலைவி-சத்யஜோதி தியாகராஜன்

 

சிறந்த படம்  சிறப்பு பிரிவு டூரிஸ்ட் ஃபேமிலி - மகேஷ் ராஜ்

 

4.சிறந்த இயக்குநர்  சிறப்பு பிரிவு - பொன்ராம்.  கொம்பு சீவி

 

5.சிறந்த கதை - குடும்பஸ்தான் - பிரசன்னா பாலசந்திரன் - 

 

6 சிறந்த திரைக்கதை ஆசிரியர் -  ஸ்ரீ கணேஷ்..  3பி ஹெச்.கே - த

 

7. சிறந்த இசையமைப்பாளர் -  நிவாஸ் கே. பிரசன்னா - பைசன்

 

8. சிறந்த ஒளிப்பதிவாளர் - எம். சுகுமார் - தலைவன் தலைவி 

 

9. சிறந்த எடிட்டர் - பரத் விக்ரமன்- டூரிஸ்ட் பேமிலி 

 

10. சிறந்த கலை இயக்குநர் பி.சண்முகம். தேசிய தலைவர் 

 

11. சிறந்த லிரிஸிஸ்ட் - விஷ்ணு எடவன் -  கூலி 

 

12. சிறந்த பின்னணி பாடகர் ஹரிச்சரன் - வீரதீர சூரன் 

 

13.சிறந்த நடன இயக்குநர் சேண்டி மாஸ்டர் - கூலி

 

15.சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் - திலீப் சுப்பராயன் - பைசன்

 

உள்ளிட்ட திரை துறையைச் சார்ந்த பல்வேறு தரப்பினருக்கு பல்வேறு தலைப்புகளில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

 

நடிகர் பிரபு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, வி.சி.குகநாதன், காற்ற கட பிரசாத், கங்கை அமரன், விக்ரமன், டி.சிவா, ஆர்.கே.செல்வஅனி, ஆர்.வி.உதயகுமார், எழில், மன்சூர் அலிகாம் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருது பெற்றவர்களையும், விருது வழங்கிய எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி குழுவினரையும் பாராட்டினார்கள்.

Related News

10874

45 வது படத்தில், 46 நடிகர்களுடன் நடித்திருக்கும் ஜீவா!
Monday January-12 2026

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

Recent Gallery