கடந்த மூன்று ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணியாற்றிய கே.பி.செல்வா, என்பவர் ‘நோட்டீஸ் ஒட்டாதீர்’ என்ற தலைப்பில் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். சுவரொட்டி ஒட்டுபவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அத்தொழிலுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை மையமாக வைத்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பயாஸ்கோப் மற்றும் டைனா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த குறும்படத்திற்கு நந்தன் சுவாமி மற்றும் வ் அவால் பிரதர்ஸ் இசையமைக்க, மோகன் வேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்ஷன் எடிட்டிங் செய்ய, கே.பார்த்திபன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
பாலாஜி குமார், மாரிக்கனி ஆகியோர் நடித்துள்ள இந்த குறும்படத்தின் திரையிடல் நேற்று சென்னை பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.
பார்த்த அனைவரது பாராட்டையும் பெற்ற ’நோட்டீஸ் ஒட்டாதீர்’ குறும்படம் விரைவில் முழு நீள திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...