Latest News :

இது என்னுடைய முன்னோர்களின் கனவு - நடிகர் சதீஷ் நினாசம் நெகிழ்ச்சி
Thursday January-22 2026

இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே ( வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

லவித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்திருக்கிறார். பீரியாட்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி கிரியேசன் - சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

 

விரைவில் தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சதீஷ் நினாசம்,  சப்தமி கௌடா, தயாரிப்பாளர் வர்தன் ஹரி , ஒளிப்பதிவாளர் லவித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 

தயாரிப்பாளர் வர்தன் ஹரி பேசுகையில், '' ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் கன்டென்ட் ஓரியண்ட்டட் மூவி. இந்தத் திரைப்படத்தை ஒட்டுமொத்த பட குழுவினரும் அர்ப்பணிப்புடன் உருவாக்கி இருக்கிறோம். உங்களின்  ஆதரவை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

இணை தயாரிப்பாளர் தேவராஜ் கிருஷ்ணப்பா பேசுகையில், '' ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞன் அவனுடைய உரிமைக்காக போராடுகிறான். அவனுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பது தானே படத்தின் கதை. அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 

 

Rise Of Ashoka

 

நடிகை சப்தமி கௌடா பேசுகையில், ''இந்த திரைப்படத்தில் அம்பிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.‌ 80,90களில் உள்ள பெண்ணாக நடித்திருக்கிறேன். அவளுக்கென்று தனியாக ஒரு கனவு இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. அதற்காக அவள் எப்படி போராடுகிறார்? என்பதுதான் உச்சகட்ட காட்சி. இது எனக்கு மிகவும் பிடித்தமானது. இது எனக்கு மட்டுமல்ல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். 

 

தமிழ்நாடு ரசிகர்கள் என் மீதும் என்னுடைய இந்த படக்குழு மீதும் ஏராளமான அன்பை செலுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படமும், பாடலும் அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 

 

நடிகர் சதீஷ் நினாசம் பேசுகையில், '' இது எனக்கு மிகப்பெரிய நிகழ்வு. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ நான் கன்னடத்தில் ஹீரோ. ஆனால் தமிழகத்தில் என்னை யாருக்கும் தெரியாது. இந்தப் படம் இயற்கையின் ஒத்துழைப்பின் காரணமாக தமிழிலும் வெளியாகிறது. இந்த நாள் என் வாழ்க்கையில் மிக சிறப்பான நாள். இது என்னுடைய முன்னோர்களின் கனவு. இந்தப் படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. 

 

என்னுடைய பத்து ஆண்டுகால திரை உலக பயணத்தில் பத்து அல்லது பன்னிரண்டு படங்களில் தான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ஏனெனில் நான் உணர்வுபூர்வமான கதைகளை தேர்வு செய்து தான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். என்னால் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடிக்க முடியாது. அது ரொம்பவும் கஷ்டம். ஏனென்றால் அதற்கு ஏற்ற கதை இல்லை. அதனால் தேர்வு செய்து.. காத்திருந்து.. அதன் பிறகு படங்களில் நடிக்கிறேன். 

 

என் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஏனெனில் இந்த கதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியான சாம்ராஜ் நகரை கதைக்களமாக கொண்டது.‌ அந்த மண்ணின் நிறம்.. அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் நிறம்.. என்னுடைய நிறம்.. ஆகிய அனைத்தும் ஒத்துப் போகிறது. இந்த தமிழகத்திற்கும் பொருத்தமானதாக இருக்கிறது.‌ அந்த மக்கள் பேசும் பேச்சு வழக்கு கூட தமிழ் கலந்திருக்கும்.‌ தமிழ்- தெலுங்கு- கன்னடம் -என எல்லா மொழிகளும் ஒன்று தான். உணர்வுகள் ஒன்றுதான். இந்த அசோகா உங்களுடைய படம். நீங்களும் ஆதரவு தாருங்கள்.

 

நான் இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக அடி எடுத்து வைத்திருக்கிறேன். வரவேற்பு தாருங்கள். இந்த குழுவினருக்கும் இந்த படத்திற்கும் உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆதரவுகளையும் தாருங்கள். 

 

நான் கர்நாடகாவில் வெளியாகும் எல்லா தமிழ் திரைப்படங்களையும் பார்ப்பேன். அங்கு தமிழ் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. அந்த வகையில் எங்களுடைய ரைஸ் ஆஃப் அசோகா எனும் திரைப்படமும் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் '' என்றார்.

Related News

10882

‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே இரண்டாம் பட வாய்ப்பு பெற்ற கே.ஜெ.சுரேந்தர்!
Thursday January-22 2026

அறிமுக இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மாயபிம்பம்’...

சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் - தமன்னா ஜோடியின் ‘புருஷன்’ படம் தொடங்கியது
Thursday January-22 2026

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது...

கவனம் ஈர்க்கும் ’காந்தி டாக்ஸ்’ பட டீசர்!
Thursday January-22 2026

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது...

Recent Gallery