Latest News :

டோவினோ தாமஸ் பிறந்த நாளில் ’பள்ளிச்சட்டம்பி’ பட முதல் பார்வை வெளியீடு
Thursday January-22 2026

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ’பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, அதிக அளவில் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிச்சட்டம்பி படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு பிறந்தநாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில்  வெளியிட்டுள்ளது.

 

இந்த சிறப்பு போஸ்டர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, வேர்ல்ட்வைட் ஃபிலிம்ஸ் (Worldwide Films banner) சார்பில் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ் (Noufal and Brijeesh), சி க்யூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் ( C Qube Bros Entertainments) சார்பில் சாணுக்கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்கின்றனர்.  பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் டோவினோ தாமஸ் இதுவரை ரசிகர்கள் காணாத முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார்.

 

நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும் விஜயராகவன், சுதீர் கரமண, பாபுராஜ், வினோத் கெடமங்கலம், பிரஷாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 1950–60கள் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் திரைக்கதை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவை டிஜோ டோமி, இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங்கை ஸ்ரீஜித் சரங், கலை வடிவமைப்பை திலீப் நாத் மேற்கொண்டுள்ளனர்.

 

இணை தயாரிப்பாளர்களாக மேகாஸ்யாம் மற்றும் தண்சீர் பணியாற்றுகின்றனர். உடை வடிவமைப்பை மஞ்சுஷா ராதாகிருஷ்ணன், மேக்கப்பை ரஷீத் அகமது கவனிக்கின்றனர். லைன் புரொட்யூசராக அலெக்ஸ் E. குரியன், நிதிக் கட்டுப்பாட்டாளராக அனில் அம்பல்லூர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக ராஜேஷ் மேனன் பணியாற்றியுள்ளனர்.

 

முதன்மை இணை இயக்குநர்களாக ரெனிட் ராஜ் மற்றும் கிரண் ரஃபேல் உள்ளனர். சவுண்ட் டிசைன் சிங்க் சினிமா, கலை இயக்கம் ராஜேஷ் மேனன், காஸ்டிங் பினோய் நம்பால, ஸ்டில்ஸ் ரிஷால் உன்னிகிருஷ்ணன். போஸ்டர் வடிவமைப்பு யெல்லோடூத்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் அகில் விஷ்ணு வி.எஸ், மக்கள் தொடர்பு - யுவராஜ்.

Related News

10887

‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே இரண்டாம் பட வாய்ப்பு பெற்ற கே.ஜெ.சுரேந்தர்!
Thursday January-22 2026

அறிமுக இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மாயபிம்பம்’...

சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் - தமன்னா ஜோடியின் ‘புருஷன்’ படம் தொடங்கியது
Thursday January-22 2026

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது...

கவனம் ஈர்க்கும் ’காந்தி டாக்ஸ்’ பட டீசர்!
Thursday January-22 2026

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது...

Recent Gallery