Latest News :

’திரெளபதி 2’ திரைப்படம் சவாலாக இருந்தது - இசையமைப்பாளர் ஜிப்ரான்
Thursday January-22 2026

வெவ்வேறு ஜானர்களில் தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்ரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று கதையான 'திரெளபதி 2' திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

 

படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்து கொண்டதாவது, "நாம் வாழும் காலத்தைத் தாண்டி, கடந்த காலத்தை நினைவூட்டும் இசையை உருவாக்குவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த நன்றி. ‘திரௌபதி 2’ ஒரு சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல!  அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கிறது. கமல்ஹாசன் சார் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தில் இசையில் பல புதிய விஷயங்களை ஆராய்ந்து கொண்டு வந்தேன். அதேபோன்று நிறைய ஆராய்ந்து இந்தப் படத்திலும் புது இசையை கொடுத்திருக்கிறேன். பிலிப் கே. சுந்தரின் அற்புதமான ஒளிப்பதிவுக்கு இணையாக பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது என நம்புகிறேன். நாளை திரையரங்குகளில் படம் பார்க்க ஆவலுடன் உள்ளேன்" என்றார்.

 

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி  தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related News

10888

‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே இரண்டாம் பட வாய்ப்பு பெற்ற கே.ஜெ.சுரேந்தர்!
Thursday January-22 2026

அறிமுக இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மாயபிம்பம்’...

சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் - தமன்னா ஜோடியின் ‘புருஷன்’ படம் தொடங்கியது
Thursday January-22 2026

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது...

கவனம் ஈர்க்கும் ’காந்தி டாக்ஸ்’ பட டீசர்!
Thursday January-22 2026

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது...

Recent Gallery