கெளதம் கார்த்திக்கை வைத்து ‘இவன் தந்திரன்’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஆர்.கண்ணன், அடுத்ததாக அதர்வாவுடன் கைகோர்த்துள்ளார்.
கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் ஆர்.கண்ணன் பேசுகையில், “இது ஒரு மிக விறுவிறுப்பான சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்டாகும். எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு ஆக்ஷன் ட்ராமா இது. கதாநாயகனாக அதர்வா நடிக்க உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த கதாபாத்திரத்திற்கு அதர்வா மட்டுமே மிக பொருத்தமாக இருப்பார். அவரது சினிமா பயணத்தில் இது ஒரு ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும். எல்லா தரப்பட்ட கதைகளிலும் ஜொலிப்பவர் என பெயரெடுத்துள்ள அதர்வா இப்படத்திற்கு பலமாக இருப்பார். கதாநாயகி மற்றும் மற்ற துணை கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம்.” என்றார்.
மாபெரும் வெற்றிப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படத்திற்கு இசையமைத்த ரதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா மிக்ஸ் நிறுவனமும் எம்.கே.ராம்பிரசாத்தின் எம்.கே.ஆர்.பி நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...