மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.ராஜா தயாரிப்பில், எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ஃபோர்த் ஃப்ளோர்’. இதில் நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி. சைக்காலஜிகள் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது.
’போடா போடி’ படப்புகழ் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், ’போடா போடி’, ‘வெண்ணிலா கபடி குழு’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து, விரைவில் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறன்றனர். செவன்த் ஸ்டுடியோ சார்பாக K.கண்ணன் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாத இறுதியில் திரைக்கு வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...