விஜயின் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக பா.ஜ.க தற்போது அமைதியாகிவிட்டாலும், விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே போகிறது.
இந்த நிலையில், மெர்சல் படத்திற்கு ஆதரவாக கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான எம்.பி சசிதரூர் கலந்துக்கொண்டார்.
போராட்டத்தில் பேசிய சசிதரூர், “சமூக, அரசியல் கருத்துகளுடன் சினிமா எடுப்பது ஜனநாயக உரிமை. அப்படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகு, அதை எதிர்க்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், ‘மெர்சல்‘ படத் தயாரிப்பாளர்களை பா.ஜனதா மிரட்டுகிறது. இது ஏற்புடையதல்ல.
ஜி.எஸ்.டி. தொடர்பான வசனம் சரியானதுதான். ஜி.எஸ்.டி.யை பொதுமக்களும், வணிகர்களும் எதிர்ப்பதால், அதை வசனமாக வைப்பதில் தவறு இல்லை. அதை நீக்க தேவையில்லை. இப்பிரச்சினையில், நடிகர் விஜயின் மதத்தை பற்றி பா.ஜனதா பேசுகிறது. ஒருவரின் மதம் என்ன என்று பார்த்த பிறகா, நாம் சினிமாவுக்கு செல்கிறோம்?” என்று தெரிவித்தார்.
ஒரு நடிகருக்காக ஒரு தேசிய கட்சி போராட்டம் நடத்தியிருப்பது, அதிலும் தமிழ் சினிமா நடிகருக்கு ஆதரவாக கேரள மாநிலத்தில் போராட்டம் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இந்த போராட்டத்தினால் கேரளாவில் நடிகர் விஜயின் மவுசும் கூடியுள்ளதாம்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...