Latest News :

பார்த்திபனுக்கு பத்து விருதுகள்!
Friday January-30 2026

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பார்த்திபன் அனைத்து முகங்களையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு விருது அறிவிப்பு அமைந்திருக்கிறது. ஆம், சிறந்த இயக்குநர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த தயாரிப்பாளர் என்று 10 விருதுகளை வென்றிருக்கிறார். 

 

இத்தகைய தனது மகிழ்ச்சியை வழக்கம் போல் தனது வித்தியாசமான பாணியில் தெரிவித்து, பார்த்திபன் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

 

உடுக்கை இழந்தவன் 

கைபோல ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்!

 

வேட்டிக் கழண்டாதான் மானம் போகனும்னு அவசியமில்லே…. ஒரு கலைஞனுக்கு அந்த வருஷத்தில படமே வரலேன்னாலும், வந்த படம் சரியாப் போகலைன்னாலும், உரிய அங்கீகாரம் கிடைக்கலைன்னாலும் மானம் மட்டுமில்லே ஒட்டிகிட்டே மரியாதையும் கூடவே போயிடும். 

 

20 மாசமா மனசு கர்ப்பமாவே இருக்கு, என் இயக்கப் படம் வரலைங்கிற பாரத்தோட… இந்த அறிவிப்பு மானம் போகாம இடுக்கண் களைந்த நட்பாய் கண்களில் நீர் கோர்த்த பரவசத்தோட, சுவாசத்தை சுவாரஸ்யமா மாத்தியிருக்கு,நம்பிக்கை தசையை ஏத்தியிருக்கு, தித்திப்பை திசையெங்கும் கூட்டியிருக்கு. நன்றி சொல்ல நா வரண்டுப் போனதால , எழுதி சமாளிக்க ஏதுவான வார்த்தையை வானத்தில கண்கள் தேடிகிட்டிருக்கு.

 

விருது பெற்ற அனைவருக்கும் என் மனமொத்தத்தையும் ஒரு பூப்பந்தாக்கி வாழ்த்துக்கள். முந்தாநாள் பொறந்து வந்த குதிரைகளோடு பந்தயத்தில் முப்பத்தய்ந்நு வருஷமாக ஓடும் இந்தக் குதிரையும் கலந்துக் கொள்வதே இன்பமெனில் கப்பை தூக்குவது பேரின்பம் அல்லவா? அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல பத்து விருதுகள். மகிழ்ச்சிக்கு வார்த்தையோ எல்லையோ உண்டா?

 

மாவீரன் கிட்டு:கிட்டியது குணச்சித்திர நடிகர் விருது நன்றிக்கு : இயக்குனர் திரு சுசீந்திரன்.

 

ஒத்த செருப்பு : 4:விருதுகள்: சிறந்த படம்/இயக்குனர்/ நடிகர் & எடிட்டர் சுதர்சன் 

 

இரவின் நிழல்: 5 விருதுகள் . சிறப்பு சிறந்தப் படம் உட்பட சிறந்த நகைச்சுவை மறைந்த ரோபோ சங்கர்

சிறந்த ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன் சிறந்த பின்ணனி கதீஜா ரஹ்மான்/ஹரிச்சரன் 

நன்றிக்கு: திரு கால்டுவெல் வேள்நம்பி, திரு பாலா சுவாமிநாதன், திருமதி அன்ஷு பிரபாகர் 

திரு பின்ச்சி ஶ்ரீனிவாசன், திரு ரஞ்சித் தண்டபானி &கீர்த்தனா/ராக்கி

 

சந்தோஷத்தில் கூச்சல் வருமா வராதா?

 

மனம் கூப்பிய நன்றி : மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள்.

துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

மாண்புமிகு மு பெ சாமிநாதன் அவர்கள்

 

கைக்கூப்பிய நன்றி : தேர்வுக் குழுவினர் / மரியாதைமிகு நீதிபதிகள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை. 

 

நலம் விரும்பிகள் உங்களோடு முதலில் பகிர்கிறேன். 

 

தூக்கம் வந்தா ஏன்னு கேளுங்க!!!!

 

சிந்திக்கிறேன் அடுத்த சிறப்புக்கு! 

 

இவ்வாறு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Related News

10901

4 நாட்களில் மிகப்பெரிய வசூல் செய்த ‘ஹாட் ஸ்பாட் 2’! - உற்சாகத்தில் படக்குழு
Thursday January-29 2026

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே...

அனைத்து தரப்பினருக்கும் ‘மரகதமலை’ படம் பிடிக்கும் - இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை
Thursday January-29 2026

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இரண்டு அம்சங்களும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ‘மரகதமலை’...

ரஜினி - கமல் படத்தில் விலகியது ஏன் ? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்
Tuesday January-27 2026

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...

Recent Gallery