Latest News :

’சிலம்பாட்டம்’ மீண்டும் வெளியாவது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் - டி.ராஜேந்தர்
Tuesday February-03 2026

சிலம்பரசன் பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான ’சிலம்பாட்டம்’ திரைப்படம்,  வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி  திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. 

 

மறுவெளியீட்டை ஒட்டி படக்குழு மற்றும் திரை பிரபலங்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்.

 

நிகழ்ச்சியில் விநியோகஸ்தர்  எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசுகையில், “ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி.” என்றார்.

 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசுகையில், “இந்தப்படத்தை மீண்டும் வெளியிடுவதாக வந்த தகவல் பெரும் உற்சாகத்தைத் தந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்தை விஜய் சாரும் அஜித் சாரும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளது. யுவன் இசையில் இப்படத்தில் ஐந்து பாடல்களுமே பிளாக்பஸ்டர். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு பெரிய லாபம் தந்த படம். இப்படத்தை எல்மா பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்குவது பெருமை. ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் சரவணன் பேசுகையில், “சிம்புவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிம்புவுக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நாம் ஒரு மாஸ் சீனை எழுதுவோம், அதை சிம்பு நடிப்பில் திரையரங்கில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. சிம்பு என் குடும்பம் மாதிரி, அவருக்கு கொடுத்த வெற்றி நான் எனக்கே தந்துகொண்ட வெற்றி. அப்போது போலவே இப்போதும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவார்கள். இந்நேரத்தில் இப்படத்தில் நடித்த சினேகா, பிரபு உட்பட அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்  இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்தார்கள். படத்தை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுவார்கள் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் டி.ராஜேந்தர் பேசுகையில், “என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, சிலம்பாட்டம் படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், ’விண்ணைத் தாண்டி வருவாயா’. அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்ல.? அது போல  இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றாற் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர்.  என் உயிருள்ள உஷா படமும் ரீ ரிலிஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சிலம்பாட்டம் வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். தம்பி, என் நண்பர் விஜய்யின் ஜனநாயகன் படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை.  தமிழ் சினிமா ரீ-ரிலீஸில் என் பையனின் சிலம்பாட்டம் பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.  அனைவருக்கும் நன்றி. 

 

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன்,  டி.எஸ்.ரங்கராஜன் தயாரிப்பில், 2008ஆம் ஆண்டு வெளியான போது நல்ல வசூலும், ரசிகர்கள் ஆதரவும் பெற்ற ’சிலம்பாட்டம்’ காலப்போக்கில் சிம்புவின் கல்ட் படங்களில் ஒன்றாக மாறியது. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி–படத் தரத்தில், புத்தம் புது பொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருப்பது STR ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.” என்றார்.

 

சிலம்பரசன் (STR) இந்தப் படத்தில் ‘தமிழரசன்’ மற்றும் ’விச்சு’ என்ற இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்தது  ரசிகர்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமத்து பின்னணியில், சிலம்பக் கலையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஆக்‌ஷன் காட்சிகள், சிம்புவின் உடல் மொழி, டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனி அடையாளம் கொடுத்தன.

 

இயக்குநர் S சரவணன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பெரிய பலமாக அமைந்தது. “சிலம்பாட்டம்” டைட்டில் பாடல் முதல் மெலடி, குத்து பாடல்கள் வரை அனைத்தும் அப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. சிம்புவுடன் இணைந்து சனுஷா, ஸ்நேகா ஆகியோர் நடித்திருந்தனர். வில்லன் கதாபாத்திரங்கள், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

 

மாஸ் சிம்பு, ஆக்‌ஷன் சிம்பு, கிராமத்து சிம்பு — அனைத்தையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, ’சிலம்பாட்டம்’ ரீ-ரிலீஸ் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும் என்பது உறுதி.

Related News

10907

’கார்மேனி செல்வம்’ உங்களுடன் எப்போதும் இருக்கும் ஒரு படைப்பு! - சமுத்திரக்கனி
Friday March-27 2026

ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

தமிழில் உருவான மிகப்பெரிய இணையத் தொடர் ‘முத்து என்கிற காட்டான்’!
Thursday March-26 2026

தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி...

Shruti Haasan and Murali Sharma Join Hands with Athira & Appa Cafe!
Thursday March-26 2026

Adhira & Appa Coffee, built on the philosophy of sustainability and authenticity and part of the EBG Group, has announced acclaimed actors Shruti Haasan and Murali Sharma as their brand ambassadors...

Recent Gallery