தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் போட்டியாளர்களை பதற வைத்த நடிகர்!
Friday February-13 2026

தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இராமநாராயணன் அணி, நலன் காக்கும் அணி என இரண்டு அணி நேரடியாகவும் சுயேட்சையாக சிலரும் நான்கு முனை போட்டியாக களத்தில் உள்ளனர். 

 

ஒவ்வொருவரும் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும், வாட்சாப், முகநூல் வாயிலாகவும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில் சில தயாரிப்பாளர்கள் தொலைபேசியை எடுப்பதே இல்லை. காலையில் இருந்து இரவு வரை தினம் நூறு பேர் ஒட்டு கேட்டு அழைக்கின்றனர். அலைபேசியில் எத்தனை பேருக்குத்தான் ஒரே பதிலை  சொல்வது என்று சில தயாரிப்பாளர்கள் மனம் நொந்து போய் உள்ளனர். 

 

ஓட்டு கேட்பவர்கள் ஒருபுறம் வீடியோ வெளியிட, இன்னொரு புறம் தேர்தலில் நிற்பவர்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்கிற கேள்வி எழுப்பும் வீடியோவும் வெளியாகிறது. 

 

"தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் கேட்கும் அதிரடியான கேள்விகள்"  என்று இன்று ஒரு வீடியோவின் புரோமோ வெளியாகி உள்ளது. 

 

’பீச்சாங்கை’ உட்பட சில படங்களில் நடித்தவர் நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக். தயாரிப்பாளர் சங்கத்தில் சில தயாரிப்பாளர்களுடன் நேரடியாக மோதியவர். விஷால் சிறு முதலீட்டு படங்களை தயாரிக்க வேண்டாம் என்று தெரிவித்த போது அவருக்கு எதிராக குரல் கொடுத்தவர். இப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் நிற்பவர்கள்,  நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்கிற சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். 

 

அந்த கேள்விகள் பரபரப்பாக பேசப்படும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Related News

10919

’வித் லவ்’ கொடுத்த முதல் வெற்றி! - செளந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
Thursday February-12 2026

சீயோன் (Zion Films) சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் எம்...

10 வது ஆண்டில் ஒன்று கூடிய ‘விசாரணை’ படக்குழு!
Thursday February-12 2026

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும்...

’ஆழி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Wednesday February-11 2026

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆழி' திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

Recent Gallery