கூடிய விரைவில் பா.ஜ.க-வுக்கு விஜயும், ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனமும் நன்றி தெரிவித்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அந்த அளவுக்கு பெரிய இழப்பீட்டில் இருந்து இவர்களை தமிழக பா.ஜ.க தலைவர்கள் காப்பாற்றியுள்ளார்கள்.
படம் நன்றாக இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் ரூ.120 கோடி வசூல் செய்தால் தான் தயாரிப்பு தரப்பி தப்பிக்க முடியும், ஆனால் அவ்வளவு தொகை வசூல் ஆக வாய்ப்பே இல்லை, என்று சினிமா வியாபாரிகள் கூறி வந்த நிலையில், பா.ஜ.க தலைவர்களின் எதிர்ப்பால், தற்போது படத்தின் வசூல் எங்கேயோ போய்விட்டதுடன், இந்தியா முழுவதும் மெர்சல் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் சேதி அதுமட்டுமல்ல, தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்டில் ’மெர்சல்’ படம் மூலம் இடம்பிடித்துள்ள விஜய், ஏற்கனவே அந்த லிஸ்டில் இருந்த அஜித்தை வெளியேற்றியுள்ளார்.
தற்போது, தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்டில், முதலிடத்தில் ’பாகுபலி 2’, இரண்டாம் இடத்தில் ’எந்திரன்’, மூன்றாம் இடத்தில் ’மெர்சல்’, நான்காம் இடத்தில் ’தெறி’, ஐந்தாம் இடத்தில் ‘கபாலி’ ஆகிய படங்கள் உள்ளன.
இந்த லிஸ்டில் அஜித்தின் ‘வேதாளம்’ ஐந்தாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது 6 வது இடத்திற்கு கீழ் இறங்கி, லிஸ்டில் இருந்தே வெளியேறிவிட்டது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...