Latest News :

‘பயம் உன்னை விடாது’ படக்குழுவின் நெகிழ்ச்சி செயல்!
Saturday February-21 2026

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் துணையாக, உருவாகி வரும் ‘பயம் உன்னை விடாது’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின் போது, திரைப்பட இயக்குநர் கி.மு.இளஞ்செழியன், நடிகர் கதிரவன் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஆண்டனி ஆகியோர் இணைந்து, பிரேமலதா விஜயகாந்துக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

 

நிகழ்வின் போது, ’பயம் உன்னை விடாது’ திரைப்படத்தின் கதை, அதன் சமூகக் கருத்து மற்றும் தயாரிப்பு சார்ந்த அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. திரைப்படக் குழுவின் முயற்சிகளை மனதார பாராட்டிய திருமதி பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவுகளுடனும் ஆசீர்வாதத்துடனும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

தமிழ் திரையுலகத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய பங்களிப்பு வழங்கிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதம் இந்தத் திரைப்படத்திற்கு கிடைத்திருப்பது, “பயம் உன்னை விடாது” படக்குழுவினருக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.

சமூகத்தில் நிலவும் பயம், மனஅழுத்தம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான மேலதிக அறிவிப்புகள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related News

10935

கமல் - ரஜினி இணையும் படத்தின் ஹீரோ யாரு தெரியுமா ?
Saturday February-21 2026

இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது...

புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவி செய்யும் ‘மை டியர் டாலி’
Saturday February-21 2026

வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ’மை டியர் டாலி’...

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி வேட்பாளராக முன்னேறும் விடியல் ராஜு!
Friday February-20 2026

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது...

Recent Gallery