Latest News :

நடிகையின் பெயரை வெளியிடுவேன் - சங்கீதாவின் பரபரப்பு குற்றச்சாட்டு
Friday February-27 2026

நடிகரும், த.வெ.க-வின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கீதா சில ஆண்டுகளாகவே விஜயை பிரிந்து தனியாக வசித்து வருவதாக பேசப்பட்டு வந்த நிலையில், அவரது விவாகரத்து மனு அதை உறுதிப்படுத்தியுள்ளது.

 

மேலும், நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை ஒருவருடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இது குறித்து தெரிய வந்தது முதல் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும், குடும்பம் மற்றும் பிள்ளைகளின் நலன் கருது, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்த்து வாழ்ந்து வந்ததாகவும், தெரிவித்துள்ளார்.

 

மேலும், நடிகை உடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக உறுதியளித்த விஜய், அதை செய்யாமல் உறவை தொடர்ந்ததோடு, நடிகையுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாகவும், அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

நடிகையின் நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காத விஜய், அதை ஆதரிப்பது போல் மவுனமாக இருந்ததோடு, தான் இது பற்றி கேட்ட பிறகு, தனக்கு கட்டுப்பாடு விதித்ததோடு, பொருளாதார ரீதியாகவும் தனக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கினார், என்றும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதன் மூலம் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்ட தான், இனியும் இந்த வாழ்க்கையை தொடர விரும்பவில்லை, என்று மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், தேவைப்பட்டால் சம்மந்தப்பட்ட நடிகையின் பெயரையும், அவருக்கும், விஜய்க்கும் இடையே இருக்கும் தொடர்புக்கான ஆதாரங்களையும் வெளியிடுவேன், என்றும் தெரிவித்துள்ளார்.

Related News

10946

Vijay Sethupathy’s ‘Muthu Alias Kaattan’ teaser release
Friday February-27 2026

JioHotstarhas unveileda bold and unexpected teaser for its upcoming Tamil tentpole series, Hotstar Specials ‘Muthu Alias Kaattaan’headlined byVijay Sethupathy...

கவிஞர் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சிறகு’!
Friday February-27 2026

ஃபர்ஸ்ட் காபி புரொடக்சன்ஸ் ( First Copy Productions ) சார்பில் மாலா மணியன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘சிறகு’...

நடன இயக்குநர் ராபின் இயக்கும் ‘வருத்துப் போக்கு’!
Tuesday February-24 2026

பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில் வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில், மலையாள சினிமா நடன இயக்குநர் ராபின் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வருத்துப் போக்கு’...

Recent Gallery