‘மென்டல் மனதில்’ பட முதல் வெளியானது!
Saturday February-28 2026

தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் 'மென்டல் மனதில்' படத்தில் இடம்பெற்ற 'உயிரே உயிரே' முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் 'மென்டல் மனதில்' திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் - மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

 

இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் 'உயிரே உயிரே' முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல், இயக்குநர் செல்வராகவன் வரிகளில், ஜி வி. பிரகாஷ் இசையில்,பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். இந்த பாடலில் வரிகள் - வசீகர குரல் - இசை கோர்வை - என அனைத்து அம்சங்களும் சர்வதேச தரத்தில் உள்ளதாலும் , காதல் உணர்வை துல்லியமாக பிரதிபலிப்பதாலும், இசை ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. 

 

'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள செல்வராகவன் - ஜி வி. பிரகாஷ் குமார் கூட்டணி- 'மென்டல் மனதில்' படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

10950

புதிய மைல்கல்லை எட்டிய ‘டாக்ஸிக்’ பட தமிழக வர்த்தகம்!
Saturday February-28 2026

யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது...

கவனம் ஈர்க்கும் ‘காதல் ரீசெட் ரிபீட்’ பட டிரைலர்!
Saturday February-28 2026

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் (Maali Manvi Movie Makers), டி-ஸ்டுடியோஸ் (D Studios), சன்னி டென்வி (Sunny Denvi) டென்வி புரொடக்ஷன் (Denvi Productions) ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது...

‘அன்பே டயானா’ பட முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட அனிருத்!
Saturday February-28 2026

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள  'அன்பே டயானா' படத்தின் தலைப்பு முதல் பார்வை போஸ்டரை இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார்...

Recent Gallery