Latest News :

அரசியல் கட்சி மாநாடு போல் நடந்த ‘லீடர்’ பட டீசர் வெளியீட்டு விழா!
Saturday March-07 2026

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 'லீடர்' வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கு பிரத்யேகமாக டீசர் திரையிடும் நிகழ்வு சமீபத்தில் சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி அரசியல் கட்சி மாநாடு போல், மக்கள் கடலால் நிரம்பியபடி நடைபெற்றது. சுமார் 3-க்கும் மேற்பட்ட முறையில் டீசர் திரையிட, அதை பார்த்த ரசிகர்கள் நடனம்  ஆடி தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 

 

இந்த டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், நாயகி பாயல் ராஜ்புத் மற்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஷாம், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால், படத்தின் நாயகன் லெஜண்ட் சரவணன் மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

 

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், "அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 'லீடர்' அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்," என்றார். 

 

இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, 'லீடர்' இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

 

தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட 'லீடர்' ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.

Related News

10962

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்
Saturday March-07 2026

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

Recent Gallery