Latest News :

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

 

Zee Studios, Moviemill மற்றும் Kyoorius  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. கிஷோர் பாண்டுரங்க் பெலகர் எழுதி இயக்கியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சமகாலத்தில் அரிதாக உருவாகும் மௌன திரைப்படமாக இது திகழ்கிறது. முழுவதும் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ள இந்தப் படம், ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ள ஆன்மாவை வருடும் இசையால் மேலும் வலுப்பெறுகிறது.

 

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், தனிப்பட்ட இழப்புகள், பொருளாதார சிரமங்கள் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டுள்ள சில மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்களை இணைத்து சொல்கிறது. எதிர்பாராத விதமாக அவர்கள் பாதைகள் ஒன்றாக மோதும் போது, அது உயிர்வாழ்வுக்கான போராட்டமாக, மனித உறவுகளின் தீவிரமான கதையாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாமல், நடிப்பு, காட்சிகள் மற்றும் இசை மூலமாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப் படம், பார்வையாளர்களுக்கு முழுமையான மற்றும் மனதை நெகிழ்விக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

 

நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், “ஒரு சொல் கூட பேசாமல் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்தும் திரைப்படம் என்பதால் ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். உணர்ச்சிகளை முழுக்க நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் உற்சாகமாக இருந்தது. இப்போது ZEE5 வழியாக மேலும் பலர் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் கருத்துடன் பார்வையாளர்கள் இணைந்து, தங்கள் சொந்த அனுபவமாக இந்த கதையை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

அதிதி ராவ் ஹைதரி கூறுகையில், “‘காந்தி டாக்ஸ்’ படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அமைதியான காட்சிப் பதிவு முறை மூலம் ஒரு முழுமையான உணர்ச்சி உலகை உருவாக்கும் அதன் திறன். படத்தின் ஒவ்வொரு தருணமும் நெருக்கமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக உள்ளது. திரையரங்குகளில் கிடைத்த அனுபவம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் மேலும் பரந்த பார்வையாளர்களை இந்த படம் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பார்வையாளர்களை கவனிக்கவும், சிந்திக்கவும் வைப்பதோடு, தங்கள் பார்வையில் வாழ்க்கையின் பொருளை கண்டுபிடிக்கவும் அழைக்கும் ஒரு கதை.” என்றார்.

 

இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர் கூறுகையில், “‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சவாலான முயற்சி. உரையாடல்கள் இன்றி ஒரு கதையை சொல்ல வேண்டியிருந்ததால், காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் சக்தியை முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. திரையரங்குகளில் கிடைத்த அன்பும் பாராட்டும் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. இப்போது ZEE5 இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி.” என்றார்.

 

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Related News

10966

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

Recent Gallery