Latest News :

மதுரை டைகர் சிலம்பரசன்! - ‘அரசன்’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday March-17 2026

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் பெரும் எதிபார்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது சிலம்பரசனின் கதாபாத்திரம் தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இதில் சிலம்பரசன் TR கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை சிலம்பரசன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

 

மேலும், மதுரையில் நடைபெற்ற 'அரசன் ' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சிலம்பரசன் TR- 'மதுரை டைகர்' என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கான சீருடை அணிந்து நடித்திருக்கிறார் என்பதும், இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை  டி. நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸாக குறிப்பிடத்தக்க வகையில் ' அரசன்' உருவாகி வருகிறது என்பதும் இப்படத்தின் கதையை 'பொல்லாதவன்' படத்திற்கு முன்பே இயக்குநர் வெற்றிமாறன் எழுதி நிறைவு செய்திருப்பதால் தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இந்த ஆண்டின் இறுதியிலேயே இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் படப்பிடிப்பு பணிகள் திட்டமிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

சிலம்பரசன் உடன் விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி,  விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள்.  அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். 

Related News

10980

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery