Latest News :

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கே வி என் புரொடக்ஷன்ஸ் - KVN Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது.

 

இப்படத்தில் 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.‌

 

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் 'திற நீ எந்தன் தரணி திற நீ - Thira Nee Enthan Tharani Thira Nee'' எனும்  துள்ளல் மிகுந்த மற்றும் உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். அதிரடியான தாளமும் கொண்டாட்ட மனநிலையையும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ஒரு முக்கியமான ‘பார்ட்டி கீதம்’ ஆக ( Party Anthem) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பரபரப்பான பாலிவுட் நடன தாரகை நோரா ஃபதேஹி மற்றும் வசீகரமான நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் - கவர்ச்சி - திரையில் இருவரின் ஆளுமை மிக்க தோற்றம்-  விறுவிறுப்பான நடன அசைவுகள் - ஆகியவற்றை கொண்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்தப் பாடல் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதியும் வகையிலான ஒரு ஈர்க்கக்கூடிய தாள லயத்தை கொண்டுள்ளது.

 

துடிப்புமிக்க பாடகி ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அவரது உற்சாகமான குரல் பாடலின் கொண்டாட்ட மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைத்தல் - இசை ஒருங்கிணைப்பு மற்றும் பாடல் தயாரிப்பு பணிகளை அர்ஜுன் ஜன்யா மேற்கொண்டுள்ளார்.

 

'திற நீ எந்தன் தரணி திற நீ ' பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரசிகர்களின் ஃபிளேலிஸ்டிலும் ( Playlists) , நடன மேடைகளிலும் இந்தப் பாடல் விரைவில் இடம் பிடிக்கும் என படக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

 

கே டி : தி டெவில் - KD : The Devil ' திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.

Related News

10982

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

மதுரை டைகர் சிலம்பரசன்! - ‘அரசன்’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday March-17 2026

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டி...

Recent Gallery