யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கிருத்திகா தங்கபாண்டி.எஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ‘அர்ஜுனன் பேர் பத்து’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

 

யோகி பாபுவின் 300 வது திரைப்படமாக உருவாகியுள்ள ’அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநரும், தயாரிப்பாளருமான லோகேஷ் கனராஜ் டீசரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்த டீசரின் தொடக்கத்தில், தன் வண்டியை பறிகொடுத்து தவிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக மிகவும் உணர்ச்சிபூர்வமாக யோகிபாபுதோன்றுகிறார். தன் வண்டியை மீட்க யோகிபாபு போராடுவதும் அதே வண்டியை பலர் உரிமை கொண்டாடுவதும் என பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த டீசர் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

மேலும், இப்படம் வெளியானால், பழைய வண்டிகள் வாங்கி விற்பதில் நடக்கும் பெரும் மோசடிகள் அனைத்துமே மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்துவிடும் என ’அர்ஜுனன் பேர் பத்து’ படக்குழு தெரிவித்தனர்.

 

மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா. ராஜ்மோகன், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

 

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, யதார்த்தம் கலந்த உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அனாமிகா மஹி அறிமுகமாகிறார். மேலும் காளி வெங்கட், அருள் தாஸ், அயலி மதன், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சௌந்தர்யா, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தண்டகாரண்யம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை செய்துள்ளார். அமரன் படத்தின் கலை இயக்குநரான சேகர் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார். ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். தலைவன் தலைவி படத்தின் ஆடை வடிவமைப்பாளர் நட்ராஜ் இப்படத்திற்கு ஆடை வடிவமைத்துள்ளார்.

 

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

Related News

10986

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

Recent Gallery