பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ். எஸ். லலித்குமார், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை நயன்தாரா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள் .
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் வெளியீட்டு அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து, டிரைலர், ஸ்னீக் பீக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...