மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் ’புரொஜெக்ட் ஹெய்ல் மேரி’
Tuesday March-24 2026

'தி மார்ஷியன்' நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' என்ற அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவல் ஒன்றை வெளியிட்டார். Phil Lord மற்றும் Christopher Miller தயாரித்து இயக்கிய இந்த அறிவியல் புனைகதை சாகசத் திரைப்படத்திற்கு, Drew Goddard வெள்ளித்திரைக்கு ஏற்றாவாறு தழுவி திரைக்கதை எழுதியுள்ளார். லண்டனில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வெளியான இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், இன்றுவரை 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது!

 

கதைச்சுருக்கம்- பூமியில் இருந்து பல ஒளியாண்டுகள் தள்ளியுள்ள தொலைதூர நடசத்திர மண்டலத்தில், ஒரு தனித்த விண்கலத்தில் கோமாவில் இருந்து விழித்தெழும் அறிவியல் மற்றும் அணுக்கூறு உயிரியலாளரான Ryland Grace (Ryan Gosling) மிகவும் அதிர்ச்சியடைகிறார். அவர் தனது நினைவை மீட்டெடுக்கும்போது, ஒரு வினோதமான பொருளின் மர்மத்தை ஆராய வேண்டும் என்ற தனக்கான பணியை நினைவு கூர்கிறார். அப்பொருள், சூரியனின் ஒளியை மங்கச் செய்து, அதை முற்றிலுமாக ஒழிக்கும் Astrophage என்ற நுண்ணுயிரியாகும். Ryland Grace -ஐப் பணியில் அமர்த்தும் Eva Stratt (Sandra Huller), Astrophage -களை முற்றிலுமாக அழிக்க ப்ராஜெக்ட் ஹெயில் மேரியைத் தொடங்குகிறார். 

 

CREDITS:

 

பின்னணிக் குரல்-James Ortiz as the voice of the Alien Rocky while Ray Porter & Meryl Streep as the other voices of Rocky, Priya Kansara as the voice of Mary of Hail Mary Ship

இசை- Daniel Pemberton, ஒளிப்பதிவு- Greig Fraser

 

ஆங்கிலம், தமிழ், தெலுங்கு & இந்தி ஆகிய மொழிகளில் சோனி  பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடுகிறது.

Related News

10994

என் திரைப் பயணத்தின் சிறந்த படம் ‘பைக்கர்’! - ஷர்வானந்த்
Tuesday March-24 2026

அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில், ஷர்வானந்த், டாக்டர்...

இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் 'லவ் 3.0'!
Sunday March-22 2026

சினிமா மீதான ஆர்வத்தால் படிப்புக்கு ஏற்ற பணி மற்றும் நல்ல ஊதியத்தை கைவிட்டுவிட்டு, நடிகராக வேண்டும் என்று பலர் கோடம்பாக்கத்தில் முகாமிட்டு பல வருடங்களாக வாய்ப்பு தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்கள் பிரபலமாகும் பலர் சினிமாவுக்குள் எளிதியில் நுழைந்து விடுகிறார்கள்...

நான் ஆசைப்பட்ட திரைப்படம் ‘நீளிரா’! - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி
Saturday March-21 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery