ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ‘ஸ்பைடர்’ படமும் ஒன்று. தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபு, நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இப்படம் தெலுங்கிலும் உருவாகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க, முக்கிய வேடம் ஒன்றில் பரத் நடிக்கிறார். ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள இப்பட பாடல்களில் ஒன்றான “பூம் பூம்...” பாடலின் டீசர் நாளை (ஆகஸ்ட் 2) பாடலாக வெளியாக உள்ளது. நிகிதா காந்தியின் தேனிசை குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் இந்த வருடத்தின் மிக சிறந்த பாடலாக வரும் என்று படக்குழுவினர் பெரும் நம்பிக்கையில் உள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...
பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’...
கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த ‘மாஸ்க்’ திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஓளிபரப்பாக உள்ளது...