பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி, பிக் பாஸ் போட்டியில் கலந்துக்கொண்டு தோல்வியுற்று வெளியேறினார்.
பிக் பாஸியில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ஓவியாவுக்கு எதிர்மறையாக இருந்த சக்தி, ஓவியாவை திட்டியதால் ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளானார். மேலும், நேரடியாக ஓவியாவை, அடித்துவிடுவேன், என்று சக்தி மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிக் பாஸ் குறித்து பேட்டி அளித்துள்ள சக்தி, பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் கிடையாது. எந்த காட்சிகளை கோர்வையாக்கி காட்ட வேண்டும் என்பது மட்டுமே ஸ்கிரிப்ட். ஒருவரை நல்லவராகவும், கெட்டவராகவும் காட்டுவது பிக்பாஸின் வேலை.
நான் செய்த சிறு தவறுகளை எடுத்துக்காட்டினாங்களே தவிர, நல்ல விஷயங்கள அவர்கள் காட்டவேயில்லை. இதை நான் பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை.
பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு, எல்லோரையும் நம்பி ஏமாந்துவிட்டேன், என தெரிந்துக் கொண்டேன். இனி என்னை மட்டுமே நான் நம்புவேன். சமூக வலைதளங்களில் வந்த சில கமெண்ட்களாலும், கெட்ட பெயர்களால் என் அம்மா அழுதார்கள். அது என்னை மிகவும் பாதித்துவிட்டது.” என்றார்.
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...