ஊர் பேர் ஒன்றை தலைப்பாக வைத்து தனது முதல் படத்தை இயக்கி, அதில் இரண்டாம் ஹீரோவாக அறிமுகமான இந்த தாடி வெச்ச இயக்குநர் கம் ஹீரோ, இயக்குநராக இரண்டாவது படத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தவர். அதன் பிறகு தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
நடித்ததில் ஒன்று இரண்டு படம் நன்றாக ஓட, மற்ற படங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்தது. இதனால் தனது சொந்த நிறுவனத்துக்கு ஒரு படம், வெளி நிறுவனத்துக்கு ஒரு படம் என்று நடித்துக் கொண்டிருப்பவர், தான் தயாரித்த படங்களில் ஏற்பட்ட நஷ்ட்டத்தை சமாளிப்பதற்காக சென்னை வாங்கிய சில பிளாட்டுகளை விற்றுவிட்டாராம்.
இருந்தாலும், அதற்கெல்லாம் கவலைப்படாமல், சினிமாவில் சம்பாதித்தது தானே, மீண்டும் சம்பாதிச்சக்கலாம், என்று தனது நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...