Latest News :

பெரம்பூர் தொகுதி தேர்தல் களத்தில் தக்‌ஷன் விஜய்! - வைரம் சின்னத்தில் தனது வேட்பாளரை நிறுத்தினார்
Sunday April-12 2026

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தற்போதைய தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயின் த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சென்னையில் போட்டியிடுகிறார்கள். அதிலும், அக்கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதால் அத்தொகுதி நட்சத்திர தொகுதியாக உருவெடுத்துள்ளது.

 

இந்த நிலையில், திரைப்பட நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்‌ஷன் விஜய், சென்னை, பெரம்பூர் தொகுதியில் தனது வேட்பாளரை களம் இறக்கி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் தக்‌ஷன் விஜய், வைரம் சின்னத்தில் ஆஸ்லின் பெல்மென் என்பவரை தனது வேட்பாளராக நிறுத்தி, அவருக்காக பெரம்பூரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

மதுவற்ற தமிழகம், போதையற்ற இளைஞர் சமுதாயம், தரமான கல்வி. சமமான மருத்துவம், காந்தியம் வென்றிட, நல்லாட்சி மலர்ந்திட, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் சின்னமான ”வைரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்...” என்ற கோஷத்துடன், பெரம்பூர் தொகுதியில்  தனது ஆதரவாளர்களுடன் மின்னல் வேகத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார்.

 

நடிகர் விஜய் நிற்கும் தொகுதியில் நடிகர் தக்‌ஷன் விஜய் தனது வேட்பாளரை நிறுத்தி, 'வைரம் சின்னம் ஜொலிக்க' தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

11016

‘பிரேக் பாஸ்ட்’ பட டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்பு!
Sunday April-12 2026

கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...

’மக்கள் தலைவா’ பட தலைப்பு போஸ்டர் வெளியீடு!
Sunday April-12 2026

தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்...

இயக்குநர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் ’வேர்ச்சொல் இலக்கிய விருது 2026’!
Sunday April-12 2026

‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும்...

Recent Gallery