Latest News :

‘பிரேக் பாஸ்ட்’ பட டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்பு!
Sunday April-12 2026

கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது.   

 

சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள 'செல்லமே' மற்றும் 'ஆனந்த தாண்டவம்' போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, ’பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த ரொமாண்டிக் கதையில் பிக்பாஸ் புகழ் ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

சமீபத்தில்,  இந்தப் படத்தின் டீசரை நடிகை ரீமா சென் வெளியிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, வெளியான இந்த டீசரில் உரையாடல்களை விட காட்சிகளை முன்னிலைப்படுத்தி அதில் உணர்வுகள் முழுமையாக வெளிப்படும் விதமாக அமைந்துள்ளது. இதனை விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். 

 

டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நடிகர்கள்: ராணா, ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன் மற்றும் அமிதா ரங்கநாத்.  

 

தொழில்நுட்பக்குழு விவரம்: 

 

எழுத்து, இயக்கம்: Ar. காந்தி கிருஷ்ணா,

தயாரிப்பு: கிரிஜா வரதராஜ்,

தயாரிப்பு பேனர்: பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ்,

இசை: ஜிவி பிரகாஷ்,

ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர் செல்வம்

Related News

11019

’மக்கள் தலைவா’ பட தலைப்பு போஸ்டர் வெளியீடு!
Sunday April-12 2026

தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்...

இயக்குநர் பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் ’வேர்ச்சொல் இலக்கிய விருது 2026’!
Sunday April-12 2026

‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும்...

பெரம்பூர் தொகுதி தேர்தல் களத்தில் தக்‌ஷன் விஜய்! - வைரம் சின்னத்தில் தனது வேட்பாளரை நிறுத்தினார்
Sunday April-12 2026

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன...

Recent Gallery