‘மெர்சல்’ படத்திற்கு பிரச்சினை எழுந்த போது பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தாலும், விஜய் மட்டும் மவுனமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று முதல் முறையாக தனது அறிக்கையை வெளியிட்டார்.
எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஜோசப் விஜய்’ என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய், அதில் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் விஜய்க்கு புதிய சவால் ஒன்றை விட்டுள்ளனர். அந்த சவாலில் விஜய் தோற்றால் ரூ.1 கோடி தர வேண்டும், என்றும் கூறியுள்ளனர்.
‘மெர்சல்’ படத்தில் விஜய் சொல்வது போல சிங்கப்பூரில் இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டும், அப்படி அவர் நிரூபிக்க தவறினால், ரூ.1 கோடி கொடுக்க தயாரா? என்று மாணவர்கள் சவால் விட்டுள்ளனர்.
மேலும், விஜய் தவறான தகவல்களை திரைப்படத்தில் கூறி மக்களை குழப்புவதோடு, கோயில் குள்ளே செருப்பு காளுடன் செல்வது, கோயில்கள் பற்றி தவறான கருத்துக்களை மக்களிடம் பறப்புவது, போன்ற குற்றங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி போலீசில் புகாரும் அளித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...