தமிழ் சினிமாவில் பீட்சா என்ற தலைப்பில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதே பீட்சாவை மையமாக வைத்து வெளியான ‘காக்கா முட்டை’ படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அப்படங்களை தொடர்ந்து அதே பீட்சா அடையாளம் மட்டும் இன்றி, அதனுடன் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் புதிய ஐடியாலஜியுடன் உருவாகும் படம் தான் ‘பீட்சா பாய்ஸ்’.
செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன்ஸ் (SEVEN HILLSS CINE CREATIONS) நிறுவனத்தின் சார்பில் ஷங்கர்.கே.என் மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படம் இன்று எளிமையான மற்றும் கோலாகலமான பூஜையுடன் தொடங்கியது.
சிவம் சங்கர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், நாயகியாக நேகா நடிக்கிறார். சரத் லோகித் அஷ்வா வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஜிம்மி கலி, சிவா, காக்கா முட்டை ரமேஷ், அருள், சோப்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சேகர் கேஷவ் சிர்ரின் இசையமைத்து இயக்கும் இப்படத்தின் கதைப்படி, பீசா ரெஸ்டாரண்டில் பணிபுரியும் ஐந்து இளைஞர்கள், புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெற போராடுவது தான் மையக்கரு. அவர்கள் சந்திக்கும் சவால்கள், அதனை எதிர்கொண்டு வெற்றி பெறும் பயணம் ஆகியவை காமெடி, செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் அம்சங்களுடன் கூடிய முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகிறது.
ஒளிப்பதிவை குரு பிரசாத் மேற்கொள்ள, முதன்மை இணை இயக்குநராக ஆர்.எல்.ஜெகதீசன் பணியாற்ற, படத்தொகுப்பை கணேஷ் குமார். டி கவனிக்கிறார். கலை இயக்கத்தை கணேஷ் மேற்கொள்கிறார். உடைவடிவமைப்பை வினோத் கவனிக்க, புரொடக்ஷன் டிசைனராக சதீஷ் பிரம்மாவர் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இளம் தலைமுறையின் கனவுகள், முயற்சி மற்றும் வெற்றியை மையமாக கொண்டு உருவாகும் ’பீட்சா பாய்ஸ்’ படம், ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படம் குறித்த பிற அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது...
இந்திய பொழுதுபோக்குத் துறையின் போக்கையே மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாக, கேமென் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Gammen Sports and Entertainment Pvt...