எங்கு பார்த்தாலும் ‘மெர்சல்’ பட சர்ச்சையும், விஜய்க்கு பலர் அளிக்கும் ஆதரவு குறித்தும் தான் செய்தியாக உள்ள நிலையில், விஜயை காட்டிலும் அரசியலுக்கு சிறந்தவர் நடிகர் அஜித் தான் என்று பிரபல இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்திற்கான புரொமோஷன் வேலைகள் படு ஜோராக நடந்துக்கொண்டிருக்கின்றன. இதற்காக படக்குழுவினர் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர்.
இயக்குநர் சுசீந்திரன் பேட்டி அளிக்கையில், அவரிடம் மெர்சல் மற்றும் விஜய் - அஜித், அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சுசீந்திரன், “அரசியலை பொருத்தவரை விஜயை காட்டிலும் அஜித் தான் சிறப்பாக செயல்படுவார். எனவே, அவர் தான் அரசியலுக்கு வர வேண்டும்.
தற்போது சினிமாவில் விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் ஈட்டி கொடுக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தலைவராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், என்று அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்த நிலையில், இயக்குநர் சுசீந்திரனின் இத்தகைய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...