விஜயின் ‘மெர்சல்’ படத்தில் பேசப்பட்டிருந்த ஜி.எஸ்.டி-க்கு எதிரான வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதுவே படத்திற்கு பெரிய விளம்பரமாக மாறி, வசூலில் மிகப்பெரிய சாதனையை நோக்கி படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் விஜய்க்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், பிரச்சினை குறித்தோ அல்லது பா.ஜ.க எதிர்ப்பு குறித்தோ விஜய் எந்தவித கருத்தும் கூறாமல் அமைதி காந்து வருகிறார்.
இந்த நிலையில், ’மே 17’ இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, நடிகர் விஜய் தைரியம் இல்லாதவர், என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய திருமுருகன் காந்தி, “விஜய் உண்மையாகவே ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று நினைத்திருந்தால், முதல் குரல் அவருடையதாக தான் இருக்க வேண்டும்.
ஒரு கலைஞனுக்கு உள்ள ஆளுமை என்பது அரசு அவர்களை அடக்கும் போது அதை மீறி, இது தான் உண்மை என்று சொல்ல வேண்டும்.
ஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜய்யிடம் நான் பார்க்கவில்லை, அது மனதிற்கு வருத்தமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...