ஒரு படம் முடிவதற்குள் இயக்குநரும், தயாரிப்பாளரும் ஒருவரால் கொஞ்சம் அதிகமாக கஷ்ட்டப்படுவார்கள். அவர் தான் நாயகி. தனக்கு வேண்டிய வசதிகளை பிடிவாதமாக கேட்டு வாங்கும் இவர்கள், தங்களுடன் வரும் அம்மா, அம்மாவின் உதவியாளர் என்று அனைவருக்கும் ஏகபோக வசதிகள் வேண்டும் என்று அடம் பிடிப்பதும் உண்டு.
அப்படிப்பட்ட ஹீரோயின்கள் மத்தியில், ரொம்ப எளிமையாக நடந்துக்கொண்டதோடு, படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஹீரோயின் ஒருவரை இயக்குநர் ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘நண்டு என் நண்பன்’ படத்தின் ஹீரோயின் ஆத்மியா தான் அந்த பாராட்டுக்கு சொந்தமான ஹீரோயின். அவரை பாராட்டியவர் இயக்குநர் ஆண்டாள் ரமேஷ்.
இது குறித்து கூறிய இயக்குநர் ஆண்டாள் ரமேஷ், “மனம் கொத்திபறவை படத்தில் நடித்த ஆத்மியாவை ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்தோம். டிரஸ், ஹோட்டல், கார், உணவு, எல்லாமே கம்பெனி கொடுத்ததை ஏற்றுக்கொண்டு படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்திற்கு வந்து முழு ஒத்துழைப்பு தந்த நடிகை ஆத்மியா இன்றைய சினிமாவிற்கு இவரை போன்ற நடிகைகள் இருந்தால் தயாரிப்பாளருக்கு பேருதவியாக இருக்கும்" என்கிறார்.
ஜித்தன் ரமேஷ், ஆத்மியா, முருகதாஸ், சந்தானபாரதி, அனுமோகன், சாந்தினி ஆகியோரும் நடித்து வரும் இந்த படத்திற்கு, ஆத்மியா முன்பாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹீரோயின் ஒருவரால் தடைபட்ட நிலையில், தற்போது ஆத்மியாவால் வேகமாக வளர்ந்து வருகிறது.
அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...