பல சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்து வந்த ‘மெர்சல்’ தற்போது ரூ.200 கோடியை வசூலிக்கப் போவதாக கூறப்படுவதோடு, படம் இந்தியா முழுவதும் ஹிட் ஆகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், விஜய் ரசிகர் மன்ற தலைவருக்கு நேர்ந்த கொடூரத்தால், ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கேரளாவில், நேற்று (அக்.25) திருவனந்தபுரம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் லவ்டுடே ஸ்ரீநாத், இரவு கட்-அவுட்கள் வைத்துவிட்டு வீடு திரும்பும் போது பேருந்து மோதி மரணம் அடைந்துள்ளார்.
விஜயின் தீவிர ரசிகரான இவர், விஜய் வெறியராக வலம் வந்தவர் ஆவார். இவரை மையமாக வைத்து தான், ‘போக்கிரி சைமன்’ என்ற மலையால திரைப்படத்தை எடுத்தார்கள்.
அப்படிப்பட்ட ஒரு ரசிகர், இப்படி கொடூரமாக உயிரிழந்த சம்பவத்தால் கேரளா விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி, ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...
மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ...
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23...