Latest News :

அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் - ரசிகர்கள் பெருமூச்சு விட்டுக்கலாம்!
Thursday October-26 2017

’வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று அஜித் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடித்தது அவருக்கு ரொம்ப பிடித்திருந்தாலும், அவரது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதிலும், விவேகம் படத்தில் ரிசல்டால் அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்சட்டாகிவிட்டார்கள்.

 

இதற்கிடையே, அஜித்தின் அடுத்தப் படத்தையும் சிவா தான் இயக்கப் போகிறார், என்ற தகவல் அஜித் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அப்படி எந்தவித அசம்பாவிதமும் நடைபெற்றுவிடாது என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றன.

 

ஆம், அஜித்தின் அடுத்த படத்தை சிவா இயக்கப் போவதில்லை. சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ என்ற வெற்றி படத்தை கொடுத்த புஷ்கர் காயத்ரி இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

 

மேக்கிங்கில் கலக்கக்கூடிய இயக்குநர்களில் ஒருவரான புஷ்கர்-காயத்ரி, விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோரை வைத்து இயக்கிய ‘விக்ரம் வேதா’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வித்தியாசமான திரைக்கதையால் அனைவராலும் பாராட்டப்பட்டது.

 

இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனம் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது. இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கே கொடுக்க வேண்டும் என்று அஜித் கூறியதால், முதலில் ஒகே என்று கூறிய தயாரிப்பு தரப்பு, பிறகு சிவா வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததோடு, அஜித்திடமும் அதனை கூறியதாம். பிறகு புஷ்கர் - காயத்ரியை அஜித்திடம் அறிமுகப்படுத்தி கதை சொல்ல வைத்தனராம்.

 

அஜித்துக்கு கதை பிடித்து போனதால், புஷ்கர் - காயத்ரி தம்பதியையே தனது அடுத்த படத்தின் இயக்குநராக ஓகே செய்துவிட்டாராம். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டே தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related News

1110

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery