பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலர் மக்களிடம் பிரபலம் ஆனாலும், சிலர் நல்லவர்களாகவு, சிலர் கெட்டவர்களாகவும் பிரபலமாகியுள்ளனர். இதற்கு காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் நடந்துக்கொண்ட விதம் தான்.
அந்த வகையில், நடிகை ஓவியா மக்கள் மனதில் மகாராணியாக இடம் பிடித்திருக்கிறார். அவரை நிகழ்ச்சியில் காயத்ரியுடன் சேர்ந்துக்கொண்டு கலாய்த்த ஜுலி, மக்களிடம் வில்லியாக பிரபலமாகியுள்ளார்.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் ஓவியா ரசிகரகள் ஜுலியை வருத்தெடுப்பதோடு, பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் கூட, அவரை அவமானப்படுத்தி விடுகிறார்கள். இப்படித்தான் கடந்த மாதம் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், ஜுலியின் முகத்தில் ஓவியா ரசிகர்கள் கரியை பூசி அனுப்பினார்கள்.
இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜுலியை தொடர்புகொண்டு கேட்ட போது, தான் யாருக்கும் எந்தவித விளக்கமும், பேட்டியும் கொடுக்க மாட்டேன், என்று பந்தா காட்டியவர், யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன், என்கிறார்.
அப்படி என்ன பிஸி, என்று கேட்டால், கூடிய விரைவில் உங்களுக்கு தெரியும். நான் அமைதியாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இன்னும் கூடிய விரைவில் அதிரடியாக நான் களத்தில் இறங்குவேன், அப்போது ஓவியாவின் ஆர்மி என்னை பார்த்தாலே அளறும், என்று கூறுகிறார்.
விசாரித்ததில், ஜூலி படத்தில் ஹீரோயினாக நடிக்க முயற்சித்து வருவதாகவும், ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார், என்று கூறப்படுகிறது. அதே சமயம், அவர் சினிமாவில் நடிக்கப் போவதில்லை அரசியலில் இறங்கப் போகிறார், என்றும் கூறுகிறார்கள்.
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’...
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’...
வெரஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ (ROOT – Running Out of Time) படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார்...