விஜயின் ‘மெர்சல்’ படம் ரிலிஸிக்கு முன்பாகவும், ரிலிஸிக்கு பிறகும் பல பிரச்சினைகளை சந்தித்து வந்தாலும், மிகப்பெரிய வசூலோடு ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் அனைவரும் அமைதியாகும்படி பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலர் ஆதரவு குரல் எழுப்பினார்கள்.
இந்த நிலையில், இன்று (அக்.27) வெளியாக இருந்த ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ படத்திற்கு பிரச்சினை எழுந்துள்ளது.
படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி குறித்த வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படவில்லை. அதே சமயம் தெலுங்கு மெர்சலில் அந்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதாம்.
படத்திற்கு முக்கியமான காட்சியாகவும், மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய காட்சியாகவும் அமைந்த அந்த காட்சிகளை படத்தில் மீண்டும் சேர்க்க, தெலுங்கில் மெர்சல் படத்தை வெளியிடுபவர் போராடி வருகிறார்களாம். இதற்காக இன்று வெளியாக இருந்த ‘அதிரிந்தி’ வெளியிடப்படவில்லை என்றும், வெளியீட்டு தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...