பிலிம் இன்டஸ்டிரி டிப்ரன்லி ஏபில்டு ஆர்டிஸ்ட் வெல்பேர் அசோசியேஷன் (FIDAAWA) உலக மாற்றுத்திறன் கலைஞர்களுக்கான முதல் சினிமா சங்கம் இது. இந்த சங்கத்தின் சார்பில் 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கும் ‘5G’ என்ற படத்தை தங்கள் (FIDAAWA)அமைப்பின் சார்பில் தயாரிக்கிறார்கள்.
இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் பிறந்த மாற்றுத்திறன் கலைஞர் கே.பி.ராஜபாலாஜி.எம்.ஏ இந்த திரைப்படத்தினை இயக்க உள்ளார். உலக மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து மனித நேயத்தை உருவாக்கவே இந்த திரைப்படம் உருவாகப்படுகிறது.
இந்த படத்தில் தமிழ் திரையுலக நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தங்களின் மனிதநேயத்தை வெளிபடுத்த இத்திரைப்படத்தில் பணியாற்ற உள்ளனர்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் பிற விபரங்கள் விரைவில் அறிவ்க்கப்பட உள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...