ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது. சிறுவயது தொடங்கி எம்.ஜி.ஆர்-ன் வரலாறு மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டு அந்தந்த வயதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றது.
ரமணா கம்யூனிகேஷன்ஸ்-ன் முந்தைய தயாரிப்புகளான ‘காமராஜ்’ மற்றும் ‘முதல்வர் மகாத்மா’ ஆகிய திரைப்படங்களில் பெருந்தலைவர், ராஜாஜி, காந்திஜி, இந்திரா போன்று உருவ ஒற்றுமை உள்ள நடிகர்கள் நடித்திருந்தனர், அதைப்போன்று இப்படத்துக்கான நடிகர்கள் தேர்விலும் கவனம் செலுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர் சினிமா, மற்றும் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல தென்னிந்திய மொழிப்படங்கள், மற்றும் விளம்பரப் படங்களில் நடித்துள்ள இவர், இப்படத்துக்காக வாள் சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்ற சண்டைப்பயிற்சிகளை கற்று வருகிறார்.
அண்ணாவாக ‘பெரியார்’ திரைப்படத்தில் நடித்த எஸ்.எஸ்.ஸ்டான்லி இப்படத்திலும் அண்ணாவாக நடிக்கிறார்
‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இப்படத்திற்கும் எழுதியுள்ளார்.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்கிறார்.
நவம்பர் 8 ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைக்கிறார்
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...