ரூ.150 கோடி வசூல் செய்துள்ள ‘மெர்சல்’ 200 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மெர்சல் குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் பொய், என்று பிரபல நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், “விஜயின் மெர்சல் முதல் வாரத்தில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும், படத்தின் புரொமோஷனுக்காக தயாரிப்பாளர் சொல்லும் பொய்யாக கூட இருக்கலாம்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நடிகர் அஜித் தான் நம்பர் 1. கிட்டதட்ட 5000 பேருக்கு மேல் கண் அறுவை சிகிச்சைக்கான உதவியை அஜித் செய்துள்ளார். மற்றவர்களைப் போல வெளியில் தெரியும்படி மேடை போட்டு தான் செய்யும் உதவிகளை அஜித் சொல்வதில்லை. அதனால் தான் அவரை நான் எப்போதும் சார் என அழைப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...