தீபாவளி பண்டிகையன்று வெளியான ‘மெர்சல்’ போட்ட முதலீட்டை எப்படி திரும்ப போகிறதோ, என்று கவலையில் இருந்த தயாரிப்பு தரப்பினர் தற்போது சந்தோஷத்தில் இருக்கிறார்கள். காரணம், தமிழக பா.ஜ.க-வின் எதிர்ப்பே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறிவிட்டது.
படம் ரிலிஸுக்கு முன்பாகவே படத்தை பலவிதத்தில் புரோமோஷன் செய்து வந்த தயாரிப்பு தரப்பு, டுவிட்டர் எமோஜி உருவாக்கி சாதனை நிகழ்த்தினார்கள். தென்னிந்திய திரைப்படங்களிலேயே ட்விட்டர் எமோஜியை பெற்ற முதல் படமாக மெர்சல் விளங்கியது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்ததனர்.
இந்த நிலையில், இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில், ‘மெர்சல்’ எமோஜி முடிந்துவிடுமாம். இதன் பிறகு மெர்சல் என்று போட்டால் விஜயின் புகைப்படம் வராதாம். இதுநாள் வரை ட்விட்டரில் மெர்சல் எமோஜியை கொண்டாடி வந்த விஜய் ரசிகர்கள் இனி அப்படி கொண்டாட முடியாது என்பதால், பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...