நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்புவுக்கு விரைவில் ஆபரேஷன் செய்ய உள்ளதால் அவர் கலந்துக்கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் தனது வீட்டில் வழுக்கி விழுந்த நடிகை குஷ்புவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அதற்கு முன்பே அவருக்கு வயிறு பிரச்சனைகள் இருக்கிறதாம். இதற்கான சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும், என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய குஷ்பு, வயிற்றில் இருக்கும் சிறு கட்டியை அகற்ற வரும் 4 ஆம் தேதி ஆப்ரேஷன் செய்ய இருப்பதாகவும், அதனல், 4,8,17ம் தேதிகளில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், தெரிவித்தார்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...