பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமானாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஓவியா தான். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் வையாபுரி. தனது காமெடி மூலம் கூட மக்களை கவராத வையாபுரி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கவர்ந்துவிட்டார்.
செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு, அவர்களின் அன்பால் மூச்சு முட்டும் வையாபுரி, நடிகர் விஜய்க்காக இயக்குநர் ஒருவரிடம் தூது போன தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டதே வையாபுரி தான்.
சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வையாபுரி, நடிகர் விஜய் மற்றும் மெர்சல் குறித்தும் பேசினார். அப்போது, ”விஜய் சாருடன் இதுவரை 10 க்கும் அதிகமான படங்கள் நடித்துவிட்டேன். இப்போது அவருக்கென்று ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.
அவர் சொன்னால் பலரும் கேட்பார்கள். பல நலத்திட்ட உதவிகளை செய்துவரும் அவர் வெறும் நடிப்பு, பாடல், ஆடல் என இருந்துவிடாமல் படங்களில் மக்களுக்கு மெசேஜ் சொல்லி வருகிறார்.
போக்கிரி படத்தில் நான் அவர், பிரபு தேவா மாஸ்டர் மூவரும் பணியாற்றினோம். அப்போது விஜய்க்கு மாஸ்டருடன் ஒரு டான்ஸ் ஆடவேண்டும் என ஆசை.
அவரிடம் கேட்க சங்கடப்பட்டுக்கொண்டு ”அண்ணா நீங்க தான் அவரை ஓகே சொல்ல வைக்க வேண்டும்” என விஜய் கேட்டார். நானும் மாஸ்டரிடம் கேட்க அவரோ, வையாபுரி விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ, நான் எப்படி அவருடன் என தயங்கினார்.
பிறகு, நான் ஸ்ரீமன் உள்ளிட்ட எல்லோரும் சேர்ந்து பிரபு தேவா மாஸ்டரை ஒத்துக்க வைத்து, பின் விஜய்யுடன் ஆடினார். விஜய் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.” என்று வையாபுரி கூறினார்.
இப்போ புரிகிறதா எதற்காக வையாபுரி தூது போனார் என்று!
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...