ராதிகா சரத்குமார் தயாரிக்கும் ‘தாமரை’ தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகை ஒருவர், தன் மீது ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் வந்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தாமரை உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ஆனந்து. இவர் உறவினரிடம் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு, வட்டியாக ரூ.1.80 செலுத்துவிட்டாராம். ஆனால் இவர் கொடுத்த காலி வங்கி காசோலையை பயன்படுத்தி அவருக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டை எழுதி கேட்டு மிரட்டுகிறார்களாம்.
இந்த பிரச்சினையில் தனது சகோதரரையும் கொலை செய்துவிட்டு, விபத்து என நாடகமாடி வருகின்றனர், என்று தெரிவித்துள்ளவர், தனது சகோதரரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, என புகார் அளித்தும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆனந்தியை கொலை செய்துவிடுவதாக மிரட்டுபவர்கள், அவர் மீது ஆசிட் வீசுவோம், என்றும் தொடர்ந்து மிரட்டி வருகிறார்களாம்.
இது பற்றி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நடிகை ஆனந்தி, முதல்வர் தனிப்பிரிவிற்கும் புகார் மனு கொடுத்துள்ளாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...