ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜுலி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது கோபத்திற்கும் ஆளானார். காரணம், ஜல்லிகட்டு போராட்டத்தின் போது தன்னை வீரமங்கையாக காட்டிக் கொண்டவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது போலியான முகத்தையும் காட்டியதே.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து சினிமாவில் நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் ஜுலி, நடன இயக்குநர் கலா மாஸ்டருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
கலைஞர் டிவி-யில் பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் கலா மாஸ்டர், தயாரிக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஜுலி தொகுப்பாளினியாக பணியாற்ற உள்ளார்.
திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை தயாரிப்பதுடன், நடுவராகவும் கலா மாஸ்டர் பங்கேற்க, அவருடன் நடிகர் கோகுலும் பங்கேற்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...