Latest News :

இயக்குநர் மீரா கதிரவனுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் - நடிகர் ராகுல் பாஸ்கரன்
Tuesday October-31 2017

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விழித்திரு' வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு அந்தோலஜி படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றில் ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல உயரங்களை தொடுவார் என பலரால் கருதப்படும் ராகுல் பாஸ்கரன், மதுரையை சேர்ந்தவர். மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின் ட்ரான்ஸ்பர் நிறைந்த வேலையால்  இந்தியா முழுவதும் பயணம் செய்து வாழ்ந்தவர் ராகுல் பாஸ்கரன். இயக்குனர் மீரா கதிரவன், ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பை  பாராட்டியுள்ளார்.

 

இப்படம்  குறித்து நடிகர் ராகுல் பாஸ்கரன் பேசுகையில், “இப்படத்தில் பிரபல மாடலான எரிக்கா பெர்னாண்டஸுடன் ஜோடியாக நடித்துள்ளேன். பணக்கஷ்டம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட தெரியாத, ஒரு பெரிய கோடிஸ்வரரின்  மகனாக இப்படத்தில் நடித்துள்ளேன். பல கதைகள் ஒன்று சேரும் இப்படத்தில் எனது கதை சிறப்பாக இருப்பதாக படத்தை ஏற்கனவே  பார்த்த பலர் கூறினர் . தமிழ்நாட்டில் பிறந்து இந்திய முழுவதும் வாழ்ந்துள்ளதால்  எனக்கு தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளுமே சரளமாக வரும். இப்படத்தில் எரிக்கா  தமிழ் வசனங்களை  கற்றுகொள்ள நான் உதவி செய்தது எனது மொழியாற்றலையும் மேன்படுத்திக்கொள்ள  மிகவும் உதவியாக இருந்தது. 

சினிமாவில் எனது முன்மாதிரி விஜய் சேதுபதி அண்ணா தான். கீழிருந்து போராடி பெற்ற அவரது வளர்ச்சியை போல் என் வளர்ச்சியும் இருக்க வேண்டுமென  ஆசைப்படுகிறேன். இயக்குனர் மீரா கதிரவன் அவர்களுக்கு என்றுமே நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரது மனவலிமைக்கு ஒரு பெரிய சன்மானம் கிடைக்கும். ரிலீசுக்கு முன்பு 'விழித்திரு' படத்தை பார்த்தவர்கள் தந்த பாராட்டுக்கள் ரிலீசுக்கு பிறகும்  தமிழ் சினிமா ரசிகர்களிடமிருந்தும் வரும் என நம்புகிறேன்.” என்றார்.

Related News

1155

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery