தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போதும் ஹவுஸ் புல் காட்சிகளோடு ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்திற்காக வைக்கப்பட்ட கட்-அவுட் ஒன்றால் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூரில் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு 40 அடிக்கு மேல் ஒரு கட்-அவுட் வைத்துள்ளனர்.
தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அந்த கட்-அவுட் கீழே விழ, அந்த வழியாக சென்ற ஒருவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட, போலீஸ் தரப்பிலோ, கட்-அவுட் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை, என்று கூறியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...