‘மெர்சல்’ படத்தின் மாபெரும் வெற்றியால் சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்களை தனது பேட்டியால் பெரும் கோபம் கொள்ளச் செய்திருக்கிறார் முன்னணி இயக்குநர் ஒருவர்.
அவர் வேறு யாருமல்ல, ‘ரட்சகன்’ என்ற படத்தை இயக்கிவிட்டு, அதன் பிறகு படு மொக்கையான படங்களை இயக்கிய ப்ரவீன் காந்தி தான் அந்த இயக்குநர். இவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயை படு கேவலமாக திட்டியுள்ளார்.
“விஜய் கோலா கம்பெனி விளம்பரத்திலும் நடிக்கின்றார். அதே சமயம் கத்தி படத்தின் வசனமும் பேசுகின்றார், இது மிகப்பெரிய கேவலமாக இல்லையா, அவரை பார்க்கும் போது எனக்கு கோபம் தான் வருகின்றது” என மோசமாக திட்டியுள்ளார்.
பிரவின் காந்தியின் இந்த பேட்டி விஜய் ரசிகர்களை கடும்கோபமடைய செய்துள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் பிரவின் காந்தியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள், “விஜய் எப்போதோ நடித்த கோலோ விளம்பரம் குறித்து தற்போது பேசுவது எந்தவிதத்தில் நியாயம்?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...