Latest News :

பிரபல நடிகை கற்பழித்து கொலை - நியாயம் கேட்டு போராடும் அம்மா!
Tuesday October-31 2017

கடந்த 2002 ஆம் ஆண்டு உயிரிழந்த பிரபல நடிகை பிரதியுஷா, கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார், என்று அவரது தாயார் கூறி கதறி அழுதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

முரளியின் ‘மனுநீதி’, விஜயகாந்தின் ‘தவசி’, ‘சவுண்ட் பார்ட்டி’ என சில தமிப் படங்களில் நடித்துள்ள பிரதியுஷா தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

 

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தன் கதாலருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். என்ற செய்தி வெளியானது. ஆனால், உயிருக்குப் போராடிய காதலன் பிழைத்துவிட்டார். இது குறித்து போலீசார் பதிவு செய்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

 

இந்த நிலையில், பிரதியுஷாவின் அம்மா நேற்று முன் தினம் ஐதராபாத்தில் இந்த சம்பவம் குறித்து அளித்த பேட்டியில், “என் மகள் தற்கொலை செய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவி நாடகத்தை நடத்தியுள்ளனர். அதற்கான காயங்கள், நகக் கீரல்கள் அவளின் உடல் முழுவதும் காணப்பட்டது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் விடுதலையாவார்கள். ஆண்டவன் அவர்களை தண்டிப்பான். 15 வருடமாக தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை.” என்று கண்ணீர் விட்டு அழுதார்.

 

Related News

1160

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery